HNRDF தேவை மதிப்பீட்டு அறிக்கை
காலி மாவட்டத்தில் பாகுபாடுகளை எதிர்க்கொள்ளும் சமூகத்தினரின் தேவையை நிவர்த்தி செய்தல்
மனித மற்றும் இயற்கை வள அபிவிருத்தி அறக்கட்டளை (HNRDF) தென் மாகாணத்தில் பாகுபாடுகளை எதிர்க்கொள்ளும் சமூகத்தினர் குறிப்பாக,LGBTIQ+ சமூகத்தினர் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் முகம்கொடுக்கும் சவால்களை அடையாளம் காண்பதற்காக விரிவான தேவை மதிப்பீட்டை முன்னெடுத்துள்ளது.
USAID/IDEA திட்டத்தின் ஊடாக நிதி வழங்கப்படும் இந்த செயற்பாடு, குறித்த தரப்பினரின் தேவைகளை தெரிந்துக்கொள்ளல் மற்றும் அவர்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
குறித்த சமூகத்தினரை பாகுபாட்டுடன் நடாத்துவதற்கு தாக்கம் செலுத்தியுள்ள காரணங்கள் குறித்த அறிக்கையில் பின்வறுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டம் மற்றும் கொள்கை சூழல் : சட்டத்தின் ஊடாக ஒருமித்த ஓரினச்சேர்க்கை தொடர்பை குற்றமாக கருதுவதுடன், மனித உரிமை உடன்படிக்கையில் வரையறுக்கப்பட்ட விடயங்களால் குறித்த சமூகத்தினர் மேலும் ஒடுக்கப்படுகின்றனர்.
இலங்கை சர்வதேச மனித உரிமை உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ள போதிலும் குறித்த சமூகத்தினர் தேசிய சட்டத்தினுள் முழுமையாக உள்வாங்கப்படவில்லை என்பதால் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பது தெளிவாகின்றது.
பாகுபாடு சட்டத்தை சீர்த்திருத்தம் செய்யும் சவால் : இலங்கையில் தற்போதுள்ள பாகுபாடு சட்டங்கள் அடிப்படை உரிமைகளுடன் முரண்பட்டாலும், சட்டத்தை சீர்த்திருத்த முயற்சிகளுக்கு ஆதரவாக இருந்தாலும், முன்பிருந்த சட்டங்கள் செல்லுபடியாகும் வகையில் இலங்கை அரசியலமைப்பு அனுமதிக்கிறது.
சமூகம் மற்றும் கலாசார வேறுபாடு
எதிர்மறை அணுகுமுறை : மத மற்றும் கலாசார காரணிகளை அடிப்படையாகக் கொண்டு குறித்த சமூகத்தினரை பாரபட்சத்துடன் நடத்துவதுடன், தனி மனிதர்கள் மற்றும் ஊடகங்களை வழிநடத்தும் நிறுவனங்கள் மற்றும் நபர்களால் தங்களுடைய தனிப்பட்ட விளம்பரங்களுக்காக வெளியிடப்படும் கருத்துக்களால் பாரபட்சமாக நடத்துவது மேலும் வலுப்படுத்தப்படுகின்றது.
சமூகம் சார்;ந்த வேறுபாடுகள் : பாலியல் தொழிலாளர்கள் மற்றும் LGBTIQ+ நபரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சமூகத்தினர் விலக்குதல், வதந்திகள் மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகம் போன்றவற்றை எதிர்கொள்கின்றனர்.
கல்வி மற்றும் தெளிவின்மை : பாலியல் நடத்தைகள் தொடர்பான தவறான தகவல்கள் மற்றும் முழுமையான பாலியல் கல்வி இல்லாமையால் சமூகத்தில் இழிவுநிலைக்கு பங்களிப்பு செய்கின்றது.
பொலிஸ் வன்முறை மற்றும் துன்புறுத்தல் : தன்னிச்சையாக தடுத்துவைத்தல், கட்டாய மருத்துவ பரிசோதனை மற்றும் பாலியல் தொழிலாளர்கள் மற்றும் LGBTIQ+ சமூகத்தினருக்கு எதிரான வன்முறை அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக அமைகின்றது.
உடனடி கவனம் தேவைப்படும் பல்வேறு தேவைகளை அடையாளம் கண்டுள்ளது
சுகாதார பாதுகாப்பு : பாலியல் ஆரோக்கியம், நோய்களுக்கான சிகிச்சை, உளவியல் ஆலோசனை மற்றும் திருநங்கைகளுக்கான ஹார்மோன் சிகிச்சை பற்றிய கல்வித் தகவல்களை அணுகுதல்.
உதவி நிலையம் : அவசர தொடர்புத் தகவல், சட்ட உதவி மற்றும் ஆதரவு சேவைகளை வழங்கும் நிலையத்தை நிறுவுதல்.
தொடர்பாடல் : இந்தச் சமூகங்களின் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தொழில் வல்லுநர்களுடன் தொடர்புகளை உருவாக்குதல்.
அவசர உதவி : உதவிகள் மற்றும் சட்ட உதவி பெறுவதற்கும் அவசர நிலைகளைப் அறிவிப்பதற்கும் உத்தியோகபூர்வ அவரச உதவி இலக்கத்தை உருவாக்குதல்.
விழிப்புணர்வு நிகழ்வுகள் : நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் செயற்பாடுகளுக்கு எதிராக போராடுவதற்கான மனித உரிமை, பாலியல் நோக்குநிலை மற்றும் பாலினம் தொடர்பாக அதிகாரிகள், சட்டத்தை அமுல்படுத்தல் மற்றும் மதத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் போன்றவர்களுக்கு தெளிவூட்டல்.
பாதுகாப்புத் தேவைகள் : வன்முறை மற்றும் பாகுபாடுகளை எதிர்கொள்ளும் நபர்களுக்கு பாதுகாப்பான வீடுகளை வழங்குதல்.
அடையாளம் காணப்பட்ட தேவைகளை நிவர்த்தி செய்ய பல்வேறு அணுகுமுறையை அறிக்கை முன்மொழிகிறது:
திறன்களை மேம்படுத்தும் பயிற்சிப்பட்டறைகள் : சமூக உறுப்பினர்களுக்கு அவர்களின் உரிமைகள், சட்டக் கட்டமைப்புகள் மற்றும் சுய- பாதுகாப்பு வழிகள் பற்றிய அறிவை வழங்குதல்.
உணர்திறன் வேலைத்திட்டங்கள்: மாற்று சிகிச்சை போன்ற பாகுபாடுகளை காட்டுவதற்கு பயன்படுத்தப்படும் நடைமுறைகளை பராமரிக்கும் நிறுவனங்கள் மற்றும் நபர்களைத் தொடர்புகொள்வது.
சுகாதாரப் பாதுகாப்பு முன்முயற்சிகள் : திருநங்கைகளுக்கு தேவையான அத்தியாவசிய மருத்துவச் சேவைகள் மற்றும் ஹார்மோன் சிகிச்சைக்கான அணுகலை உறுதிசெய்வதற்காக சுகாதாரப் பாதுகாப்பு வழங்குநர்களுடன் இணைந்து செயற்படுதல்
வாழ்வாதார வாய்ப்புகள் : சமூக உறுப்பினர்களுக்கான தொழில் பயிற்சி, உதவித்தொகை மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குதல்
சமூக ஈடுபாடு : புரிந்துணர்வு மற்றும் ஏற்றுக்கொள்ளளை மேலும் மேம்படுத்துவற்காக மதத் தலைவர்கள், ஊடகங்கள் மற்றும் மக்களுக்கு தெளிவூட்டு வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல்.
பரிந்துரைகள் மற்றும் ஒத்துழைப்பு : சட்ட சீர்திருத்தத்துக்கு அழுத்தம் கொடுத்தல், ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து செயற்படல் மற்றும் ஊடக பிரச்சாரங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்