ஒரு குழந்தை பாலின உறுப்புகளின் அடிப்படையில் ஒரு குழந்தை ஆணா அல்லது பெண்ணா என அடையாளம் காணப்படுகிறது. ஆனால், உறுப்புகளின்படி பெண்ணாக சமூகத்தால் அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு ஆண் சமூக அந்தஸ்தும் ஆணுக்கு பெண் சமூக அந்தஸ்தும் இருக்க வேண்டும்.

எளிமையாகச் சொல்வதானால், தங்கள் உடல் பெண் அல்லது ஆண் குணாதிசயங்களைப் பெறுகிறதா, தங்களுடைய ஆன்மா தாங்கள் பெற்ற உடலுடன் பொருந்தக்கூடிய பாலின அடையாளத்தை கோருகிறதா என்பதை அடையாளம் காணும் சிக்கலை எதிர்கொண்டவர்களான குறிப்பாக திருநங்கைகளை நான் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன்.

இவ்வாறான சூழ்நிலையிலேயே நபர் ஒருவர் சமூகத்தால் அல்லாது தன்னால் தனது பாலின அடையாளத்தை உறுதிப்படுத்தும போது, ஆணின் உடலமைப்பைக் கொண்டவர் பெண் குணங்களோடும் நடத்தைகளோடும் பெண் உடலமைப்புடன் இருப்பவர் ஆண் குணங்களோடும் நடத்தையோடும் வாழ முயல்வதை காண முடிகின்றது. அத்தகையவர்களை தற்போதைய சமூக நடத்தைக்கு ஏற்ப அடையாளம் காணலாம். அவர்களே திருநங்கைகள் என அழைக்கப்படுகின்றனர்.

தற்போது மருத்துவ விஞ்ஞானம் முன்னேறியுள்ள நிலையில், பெண்ணை ஆணாகவும் ஆணை பெண்ணாகவும் மாற்றுவது சாத்தியமாகியுள்ளது. ஹார்மோன் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை மூலம் பலர் இத்தகைய மாற்றங்களை செய்துக்கொண்டுள்ளனர்.

உதாரணங்களாக.. வெனிசுலாவில் அரசியல் ஆர்வலர் தாமரா எட்ரியன், ஜப்பானில் அரசியல் ஆர்வலர் அயா கமிகாவா மற்றும் இந்தியாவில் பொலிஸ் அதிகாரி பிரித்திகா யாஷினி ஆகியோரை சுட்டிக்காட்ட முடியும்.

மிக முக்கியமாக, இவ்வாறானவர்கள் சமூகத்தில் வாழும் ஒரு பகுதியினராக இருப்பதால், அவர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்பதுடன், தனிநபர்கள் மற்றும் ஒரு சமூகம் என்ற ரீதியில் நாம் அனைவரின் மனிதநேயத்தையும் மதிக்க வேண்டும் என்பதுடன், ஒவ்வொருவரின் பாலியல் அடையாளங்களை இழிவுபடுத்தவோ புறக்கணிக்கவோ கூடாது.

இலங்கையிலும் இவ்வாறான சமூகத்தினர் வாழ்கின்றதுடன், அவர்களை இலங்கை சமூகம் ஒரு விசித்திரமான மக்கள் கூட்டமாக புறக்கணிப்பதால், அவர்கள் சமூக ரீதியாக பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது.

திருநங்கை ஒரு சவாலா?

திருநங்கைகள் சமூகம் பல சிக்கலான சவால்களை எதிர்கொள்கின்ற நிலையில், கவனத்தில் கொள்ளாமை, ஓரங்கட்டப்படுதல், சமூக ரீதியான இழிவுப்படுத்தல் மற்றும் வேலையின்மை போன்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.

இதனால், திருநங்கைகள் சமூகத்தினர் மன உளைச்சல், பதட்டம், மனச் சோர்வு மற்றும் தற்கொலை போன்ற மனநலப் பிரச்னைகளையும் எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக தங்களுடைய பொருளாதார நிலையை மேம்படுத்த சுதந்திரமாக உழைக்கும் திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பை வழங்காதமை, வேலையைத் தேர்ந்தெடுக்கும்போது பாலுணர்வைத் தடையாகக் கொண்டிருப்பது, பணியிடங்களில் தேவையற்ற கேலிகள் மற்றும் வார்த்தைகளால் துன்புறுத்துதல், பணியிடங்களில் புறக்கணிப்பு மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகம் போன்ற சூழ்நிலைகள் தொடர்ந்து காணப்படுகின்றன.

பணியிடங்கள் மட்டுமின்றி பொது கழிப்பறைகள், பொது போக்குவரத்து சேவைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றிலும் இத்தகைய சூழ்நிலைகளை அவர்கள் எதிர்கொள்கின்றனர்.

திருநங்கைகள் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளப் பயன்படுத்தும் அறுவை சிகிச்சைகள், ஹார்மோன் சிகிச்சை போன்ற முக்கிய மருத்துவத் தேவைகளுக்கான காப்பீட்டுக் கொள்கைகள் இல்லாதமை அவர்களை நேரடியாகப் பாதிக்கிறது.

இது மன ரீதியான நோயா?

இல்லவே இல்லை.

ஒரு நபரின் உடலுக்கும் பாலினத்திற்கும் இடையில் வேறுபாடுகள் இருக்குமாயின் அது மனநோயல்ல என அமெரிக்காவின் மனநல வைத்திய சங்கம்; 1973 ஆம் ஆண்டில் கூறியுள்ளது. மேலும் இது ஒரு மனநோயல்ல என்பதை உலக சுகாதார நிறுவனம் 1990 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொண்டது.

இருப்பினும், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இந்த திருநங்கைகள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் அதிகமாகும்.

உதாரணமாக, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், திருநங்கைகளை அமெரிக்க இராணுவத்தில் இணைவதற்குத் தடை விதித்தமை, இலங்கையின் மத்திய மாகாண ஆளுநராக திருமதி நிலுகா ஏகநாயக்க நியமிக்கப்பட்டமைக்கு அஸ்கிரிய பீட மாநாயக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்தமை, மாத்தறை வைத்தியசாலையில் ஆண் ஒருவருக்கு குழந்தை பிறந்த போது ஊடகங்கள் அவரை திருநங்கையாக சித்தரித்து அவரை மிகவும் அசௌகரியத்திற்கு உள்ளாக்கிமை போன்ற விடயங்கை எடுத்துக்காட்ட முடியும்.

திருநங்கைகள் மீது சமூகத்தின் தாக்கம் அவர்களின் மன ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளதா?

ஒருவரின் பாலின அடையாளத்துடன் பொருந்தாத உடலுடன் வாழ்வதால் ஏற்படும் மன நோயான புநனெநச னலளிhழசயை என்பது திருநங்கைகள் மோசமான மனநல பாதிப்புக்கு உள்ளாகுவதற்கு காரணமாக அமைந்துள்ளதுடன், சாதாண மனச்சோர்வை விட அதிக மனச்சோர்வு மற்றும் தற்கொலை செய்துக்கொள்வதற்கு வழிவகுத்துள்ளது.

2015 ஆம் ஆண்டில் 20,000 நபர்களைக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட சர்வதேச நிறுவனம் முன்னெடுத்த இணையவழி ஆய்வுகளுக்கு அமைய, மக்களில் ஐந்து சதவீதத்துடன் ஒப்பிடும்போது, திருநங்கைகளில் 40 சதவீதம் பேர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளமை தெரியவந்துள்ளது.

மக்கள் தொகையில் 15 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், 82 சதவீத திருநங்கைகள் தங்கள் வாழ்வின் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்வதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கனேடியாவின் ஒன்டாரியோவில் 43 சதவீத திருநங்கைகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் இது கனேடிய மக்கள் தொகையில் சுமார் 4 சதவீதமாக இருந்துள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

அத்தோடு, திருநங்கைகளுக்கு எதிரான கொலைகள் சடுதியாக உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

உதாரணமாக, 2019 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் திருநங்கைகள் மற்றும் பாலினத்துடன் இணங்காத சமூகத்தினரிடையே குறைந்தது 27 வன்முறை மரணங்கள் பதிவாகியுள்ளன. 2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மாத்திரம் 26 கொலைகளை அவதானித்துள்ளதாக மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.

திருநங்கைகள் எதிர்கொள்ளும் இச்சிக்கலான சூழ்நிலைகள் குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாதமை மற்றும் சமூக ஒருங்கிணைப்புக்குத் தடையை ஏற்படுத்தி, ஆட்சியாளரிடமிருந்து வரும் பிரிவினைவாத மரபுரிமை கருத்துக்களும் தாக்கம் செலுத்தியுள்ளன.

திருநங்கைகளை நேரடியாக நிறுவனங்களில் சேவையில் இணைத்துக் கொள்ளும் நடைமுறைகளை மாற்றுதல்;. இது மிகவும் மாறுபட்ட பணியாளர்களை சேவையில் இணைப்பதற்கு வழிவகுக்கும் மற்றும் நிறுவனங்களுக்குள் படைப்பாற்றல் மற்றும் ஒத்துழைப்பை அதிகரிக்கும்.

அவர்களுடைய தொடர்பு சமூகத்தின் தற்போதைய சூழ்நிலை சமூகத்தை எவ்வாறு பாதிக்கிறது?

இலங்கையின் 25 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, இலங்கையின் சனத்தொகையில் 12 சதவீதமானோர் டுபுடீவுஐஞ சமூகமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒரு சதவீதமானோர் திருநங்கைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தென் மாகாணத்தில் இச்சமூகத்திற்கான நலன் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளின் போது, இந்த சமூகம் சமூகத்தை ஏற்றுக்கொள்வதில் காணப்படும் சிக்கல் மற்றும் சமூகத்தில் கேலிக்த்தாக பார்க்கப்படுவது போன்றவற்றை ர்Nசுனுகு பிரதான பிரச்சினையாக அடையாளம் கண்டுள்ளது.

ஒரு திருநங்கை தனது பாலின அடையாளத்தை அடையாளம் கண்டு அதனை மாற்றுவது மிகவும் கடினமானது என்பதுடன், நீண்ட செயல்முறையாகும்.

எனவே, திருநங்கைகள் தங்களுடைய பாலின அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கும் அது தொடர்பான செயல்பாடுகளை ஏற்பாடு செய்யும் வரை, திருநங்கைகளை கேலி செய்வதல் மற்றும் அதனை சமூக விரோத செயலாக கருதி சமூகத்தினர் செயல்படுவதும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

எனவே, அவர்கள் தங்களுடைய அடையாளத்துடன் பொருந்தக்கூடிய வாழ்க்கையாக மேம்படுத்துவதற்கு அவர்கள் தங்களுடைய அடையாளத்துடன் தொடர்புடைய உண்மையான சமூக அனுபவங்களைக் கொண்டிருப்பது அவசியமானது.

உதாரணமாக, தன்னால் அடையாளம் காணப்பட்ட அடையாளத்துடன் தொடர்புடைய பொதுவான நடத்தைகளுடன் பழகுவதற்கு சமூகத்துடன் முரண்பட வேண்டியுள்ளது. இவ்வாறான அனுபவங்கள் இல்லாமல் ஒருவரின் அடையாளத்தை மாற்றுவதற்கான அறுவை சிகிச்சையை நாடுவது சாத்தியமற்றது என்பதுடன், அது தொடர்பாக சமூகத்தில் புரிதலும் இல்லை. இவ்வாறான விளிம்புநிலைக் குழுக்கள் தங்கள் பாலின அடையாளத்தை நிலைநிறுத்துவதற்கான தடைகள், சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுதல் மற்றும் புறக்கணிக்கப்படுதல் போன்றவற்றால் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

சில குழந்தைகள் இளம் வயதிலேயே திருநங்கைகள் சமூகத்தை சேர்ந்த நபராக தங்களுடைய அடையாளத்தை உணர்ந்தாலும், அவர்கள் 18 வயதுக்கு பின்னரே உடல் ரீதியாக தங்ளுடைய் அடையாளத்தை மாற்றிக் கொள்கின்றனர். ஆனால் ஒருவர் தனது உண்மையான பாலின அடையாளத்துடன் பொருந்தாத உடலில் வாழ்வதை உணர்ந்து, அந்த அடையாளத்திற்கு ஏற்ப தனது வாழ்க்கையை வடிவமைக்க முயன்றாலும் சமூகத்தால் அடையாளம் காணப்பட்டதன் பின்னர் அவர் குறிப்பாக, பாடசாலைகளுக்குள் அதிகளவு வெட்கத்திற்கும் புறக்கணிப்புக்கும் உள்ளாகின்றார். பாடசாலைகளுக்குள் இவ்வாறான பிள்ளைகளுக்கு கல்வி கற்பிக்க மறுத்த ஆசிரியர்கள் குறித்து காலி மாவட்டத்தில் தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும், மகளீர் பாடசாலைகளில் ஆண் குணாதிசயங்களுடன் நடந்துகொள்ளும் குழந்தைகளையோ அல்லது ஆண்கள் பாடசாலைகளில் பெண் குணாதிசயங்களுடன் நடந்துக்கொள்ளும் குழந்தைகளையோ ஏனைய குழந்தைகளை போன்று பழகுவதற்கு பெற்றோர்களோ அல்லது பெரியவர்களோ வாய்ப்பு வழங்காதமை மற்றும் பல பெயர்களால் முத்திரை குத்தப்படுகின்றதுடன், இதுபோன்ற குழந்தைகள் தனிமையில் இருப்பது மற்றும் சில சமயங்களில் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பாடங்களைத் தேர்ந்தெடுப்பதில் கூட பாகுபாடு காட்டப்படும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இவ்வாறான காரணங்களால், அவர்களின் கல்வி தடைபடுகின்றதுடன், அவர்களின் எதிர்கால வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்காக தொழில்முறைத் தகுதியைப் பெறுவதற்கு அல்லது தேவையான வழிகாட்டுதலையும் மிகக் குறைந்த மட்டத்திலேயே பெறுகின்றனர். இதுபோன்ற வழிகாட்டுதல்களை வழங்குவதற்கு யாரும் இல்லாமல் சந்தர்ப்பங்களில் அவர்களின் வாழ்க்கை தொலைந்தும் நிலைமையும் காணப்படுகின்றது.

அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள பணிக்குச் செல்ல வேண்டிய தேவை இருந்தாலும், உடல் அடையாள மாற்றத்தை செய்துக்கொள்ளாது தங்களுக்கான பணியை தேடிக்கொள்வதில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. வேலைகள் கிடைக்காத காரணத்தில் தங்களால் செயக்கூடிய மாற்றுத் தொழிலாக பாலியல் தொழிலாளிகளை நாடி வருமானம் பெறும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இவ்வாறு பாலியல் தொழில் நாட்டம் கொண்டுள்ள பெரும்பாலானோர் இதற்கு முன்னர் வேறு சமூகத்தரம் தொடர்பான பணிகளுக்கான நேர்முகத் தேர்வுகளுக்குச் சென்று, தங்களின் தகுதிக்கு அப்பாற்பட்டு பாலின அடையாளத்தைக் கேள்விக்குட்படுத்தி வேலை வாய்ப்புகள் வழங்கப்படாது ஏமாற்றமடைந்தவர்களாக இருக்கின்றனர்.

எனவே, அவர்கள் பெரும்பாலும் தங்களுடைய கிராமப்புறங்களை விட்டு வெளியேறி கொழும்பை சுற்றியுள்ள நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்து, அந்நியர்களுடன் மிகவும் வசதியான வாழ்க்கை வாழ்கின்றனர். இருப்பினும், பாலின அடையாளத்தை மாற்றுவதற்கான செயல்முறையை நிறைவு செய்தவர்களுக்கு மாத்திரமே இது சாத்தியமாகும் என்பதுடன், இடைநடுவில் இருப்பவர்களுக்கு இது மிகவும் கடின செயலாகும்.

சரியான விழிப்புணர்வு இல்லாது அறுவைசிகிச்சையை பயன்படுத்துவது திருநங்கைகளுக்கு அச்சுறுத்தல்??

திருநங்கை சமூகத்தினர் தங்களுடைய அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக உடலில் மாற்றங்களைச் செய்வதற்கு ஹோர்மோன் சிகிச்சையை மேற்கொள்வதில் உள்ள பொதுவான பிரச்சினையாக, அவர்களுக்கு முன்னர் அத்தகைய சிகிச்சையைப் பெற்ற திருநங்கைகளின் விழிப்புணர்வு மற்றும் ஆலோசனையின்படி அவர்கள் சிகிச்சையை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஆனால், இது மிகவும் ஆபத்தானது என்பதுடன், முறையான பரிந்துரைகள் இல்லாது இத்தகைய சிகிச்சைகளை மேற்கொள்வது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்

ஹோர்மோன் சிகிச்சை மூலம் உடல் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டாலும், அரசு வைத்தியசாலையில் பதிவு செய்து சிகிச்சை பெற்றவர்களுக்கு மாத்திரமே பாலின மாற்றம் தொடர்பான அடையாளப் பதிவுச் சான்றிதழைப் பெற முடியும். அத்தோடு, முறையான மருத்துவ பரிந்துரை இல்லாமல் ஹோர்மோன் சிகிச்சை பெற்று உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்ட திருநங்கைகள் தொடர்பாக தகவல்கள் இருந்தாலும் அது தொடர்பில் சமூகத்தில் முறையான கவனம் செலுத்தப்படுவதில்லை.

அதேபோன்று, இந்த செயல்முறையை சட்டப்பூர்வமாகவும், உடல் அல்லது மனரீதியாக பாதிப்பு ஏற்படுத்தாத விதத்திலும் எவ்வாறு மேற்கொள்ள முடியும் என்பதைப் பற்றித் தெரிந்துக் கொள்ளவும் தகவல்களை பெற்றுக்கொள்ளவும் முடியாதமையால் மருத்துவ பரிந்துரை இல்லாமல் அதிக அளவு மருந்துகளை எடுத்துக் கொள்வதற்கு காரணமாக அமைந்துள்ளது.

Scroll to Top