சர்வதேச சட்டம், மனித உரிமை மற்றும் வாழ்வதற்கான உரிமை
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடான இலங்கை, மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் (UDHR), சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கை (ICCPR), சமூக, பொருளாதார மற்றும் கலாசார உரிமைகள் தொடர்பான உடன்படிக்கை (ICSECR) போன்ற உடன்படிக்கை, கொடூரமான, இழிவான நடத்தை மற்றும் சித்திரவதைகள் இன்றி வாழ்வதற்கு இருக்கும் உரிமை தொடர்பான உடன்படிக்கை (Torture Convention) போன்ற பல உடன்படிக்கையில் சர்வதேசம் முன்னிலையில் கையெழுத்திட்டுள்ள சுயாதீன நாடாகும்.
சிங்கராசா வழக்கு தீர்ப்பின் மூலம் சர்வதேச சட்டம் தனது சட்டத்தின் ஒரு பகுதி என்ற ஒற்றுமைக் கோட்பாட்டை இலங்கை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால், வேறு பிற சட்டங்களின் ஊடாக இலங்கை மக்களின் வாழ்வுரிமை, பொருளாதார மற்றும் சமூக உரிமை, வன்முறையின்றி வாழ்வதற்கான உரிமை, கருத்துச் சுதந்திரம் மற்றும் மனசாட்சிக்கான உரிமை, பேச்சுரிமை மற்றும் கருத்து தெரிவிக்கும் உரிமை ஆகியவை அங்கீகரிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கை அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயம், அமைதியான நல்லிணக்க சமூகத்திற்கு தடைகளை ஏற்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மேற்கூறிய உரிமைகளை உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கை மக்களின் இறையாண்மை என்பது மீற முடியாத உரிமை என்றும் அது தொடர்பான அனைத்து உரிமைகளையும் பாதுகாப்பது அரசு மற்றும் அரசாங்கத்தின் பொறுப்பு எனறும் இலங்கை உயர் நீதிமன்றத்தால் மீண்டும் மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
1978 ஆம் ஆண்டு இலங்கைக் குடியரசின் அரசியலமைப்பின் 4 ஆவது சரத்து மற்றும் 6 ஆம் அத்தியாயத்தின் அடிப்படையில் அரசக் கொள்கையை வழிநடத்தும் கோட்பாடுகள் மற்றும் அடிப்படை பொறுப்பு ஆகியவற்றி அத்தியாயங்களுக்கு அமைய அரச வளங்கள் மற்றும் சொத்துக்களில் நியாயமான பங்கைப் பெறுவதை உறுதிசெய்வதல் மற்றும் அதற்கான சரியான நிர்வாகம், அதற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் மற்றும் சேவைகளை உறுதி செய்வது அரசின் பொறுப்பாகும்.
வாழ்வுரிமைக்கான உரிமை என்பது சுதந்திரமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தேவைப்படும் சமூக நல்லிணக்கத்தை உருவாக்குவதுடன், வாழ்வதற்குத் தேவையான அடிப்படை விடயங்களான விவசாயிகளுக்கு தேவையான உரம், நீர், எரிபொருள் மற்றும் எரிவாயு, குழந்தைகள் சுதந்திரமாக கல்வி கற்கும் வசதிகள் போன்றவற்றை வழங்குவதாகும்.
வாழ்வுரிமை என்பது சுதந்திரமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை தேவைப்படும் சமூக நல்லிணக்கத்தை உருவாக்குவதுடன், விவசாயிகளுக்கு தேவையான உரம், தண்ணீர், எரிபொருள் மற்றும் எரிவாயு, குழந்தைகள் சுதந்திரமாக படிக்க வசதிகள் போன்றவற்றை வழங்குவது.
சர்வதேச சட்டத்தின் கொள்கைகளின்படி, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மற்றும் சமூக- பொருளாதார மற்றும் கலாசார உரிமைகள் போன்றன ஒன்றுடன் ஒன்று பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன.
எனவே, தங்களுடைய சமூக- பொருளாதார மற்றும் கலாசார உரிமைகள் ஏதோவொரு வகையில் மீறப்படுமாக இருந்தால், எந்த நேரத்திலும் அதை எதிர்க்கும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சாசனத்தின் கீழ் உள்ள உரிமைக்கு இணங்க அவற்கை பாதுகாப்பதற்கு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்கு மக்களுக்கு உரிமை உண்டு என்பதைச் புதிதாக சொல்ல வேண்டியதில்லை.
அரச சொத்துக்களையும் வளங்களையும் சூறையாடி, இலங்கையை தவறான வகையில் ஆட்சி செய்யும் தற்போதைய அரசாங்கத்தின் அழுத்தங்களை நீண்டகாலமாக தாங்கிக் கொண்டிருந்த மக்கள் இறுதியில் வீதிக்கு இறங்கி போராடினர். ஆனால், அது இந்த உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தே தவிர அரசாங்கத்திற்கு எந்த எதிர்ப்பு தெரிவிப்பதற்கு அல்ல.
பிரான்ஸ் புரட்சியின் போது, 14 ஆம் லூயிஸ் மன்னனின் மனைவி அயசல யுவெழiநெவவந பாண் இல்லையென்றால் கேக் வாங்குங்கள் என மக்களிடம் கூறியதால், மக்கள் வீதிக்கு இறங்கி தங்களுடைய இறையாண்மை அதிகாரத்தை பயன்படுத்தி அவரை இராஜ பதவியில் இருந்து விரட்டியடித்த வரலாற்றை பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம்.
இன்று இலங்கையில் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், மதகுருமார்கள் எனப் பல்வேறு சமூகக் குழுக்களைச் சேர்ந்த பொது மக்கள் தங்களுடைய மகிழ்ச்சியாக வாழும் தங்களுடைய உரிமையை பாதுகாப்பதற்கும், சுற்றாடல் மற்றும் பொதுச் சொத்துக்களை சுரண்டுவதல் மற்றும் ஊழலுக்கு எதிராகவும் வீதிக்கு இறங்கியுள்ளனர்.
சுகதபால மென்டிஸ{க்கு எதிரான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வழக்குத் தீர்ப்பு மற்றும் பல வழக்கு தீர்ப்புகளில், அரசியலமைப்பின் 6 ஆவது உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள அரசக் கொள்கையை வழிநடத்தும் கோட்பாடுகளை பாதுகாப்பது அரசின் பாதுகாவலர்களான ஆட்சியாளர் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்பு என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தின்படி, தங்களுடைய அடிப்படை உரிமைகள் மீறப்படும் போது அதனை எதிர்ப்பது இலங்கையின் குற்றவியல் சட்டக்கோவையின் தண்டனைச் சட்டத்தின்படி குற்றமாகாது.
ஏனெனில் தங்களுடைய அடக்குமுறை மற்றும் வேதனை போன்றவற்றை கூறும் மீற முடியாத உரிமையை அமைதியான போராட்டங்கள் ஊடாக பிரதிபலிக்கின்றன.
அவ்வாறான சந்தர்ப்பத்தில், அரசாங்கம் தனது அரச அதிகாரம், பொலிஸ், இராணுவம் மற்றும் இராணுவ ஆயுதங்களை பயன்படுத்தி அவற்றை மீறுவதற்கு சட்டத்தின் ஊடாக இடமில்லை.
மக்கள் ஆயுதம் ஏந்தி, ஆயுதக் கலவரங்களை உருவாக்கி நல்லிணக்கத்தையும் அமைதியையும் சீர்குலைத்தால் மாத்திரம் அவசரகால நிலைமையின் கீழ் கட்டுப்பாடுகளை விதித்து அவற்றை கட்டுப்படுத்த முடியும்.
தற்போதைய போராட்டங்களில் மக்கள் அரசாங்கத்திற்கு எதிர்ப்பதை விடுத்து, அரசுக்கு எதிராக தங்களுடைய எதிர்ப்பை வெளியிடுவதையே காண முடிகின்றது.
பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளராக தன்னைக் காட்டிக் கொண்டு, தங்களுடைய மற்றும் தங்கள் அரசின் கையாலாகாத்தனத்தைக் சுட்டிக்காட்டு போது, அதற்கு எதிராக அமைதியான போராட்டங்களைத் தவிர வேறு என்ன செய்வது என்பதை அறிவுள்ள பொதுமக்கள் சிந்திக்க வேண்டும்.
2007 ஆம் ஆண்டில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சட்டத்தை இலங்கை நிறைவேற்றியது. (ICCPR Act No:56 of 2007)
இலங்கையின் நிலையான அபிவிருத்திக்கான சட்டம் 2010 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. (Sri Lanka Sustainable Development Act No:19 of 2017)
இந்தச் சட்டத்தின் உறுப்புரைகளுக்கு அமைய, நிலையான அபிவிருத்திக்கான 17 இலக்குகள் (17 Sustainable Development Goals) 2030 ஆம் ஆண்டளவில் அடையப்பட வேண்டும் என்பதுடன், அதற்காக கொள்கைகளையும் திட்டங்களையும் தயாரித்து தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுப்பது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
இந்த இலக்குகளில் வறுமையை ஒழித்தல் மற்றும் சமூக சமத்துவமின்மையை குறைத்தல், பாலின சமத்துவம், சுத்தமான நீர் மற்றும் சுகாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், தரமான கல்வி, காணி உரிமைகள், அமைதி மற்றும் ஒழுக்கம் தொடர்பான அதிகாரம் பெற்ற நிறுவனங்கள் (சுயாதீனமான மற்றும் வலுவான நீதித்துறை) உட்பட சுற்றுச்சூழல் மற்றும் உலகளாவிய பாதுகாப்பிற்கு அவசியமான பிற இலக்குகளை உள்ளடக்கியுள்ளது.
இந்த இலக்குகளை நோக்கிச் செல்வதற்குப் பதிலாக இன்று இலங்கை அரசு வேகமாக பின்னோக்கிச் செல்வதாகத் தோன்றுகிறது. இது தொடர்பாக மக்களுக்கு ஆழமான புரிதல் இருக்கிறதோ இல்லையோ 74 வருடங்களாக ஆட்சியாளர்களிடம் எதிர்பார்த்த தேசிய ஒருமைப்பாடு, மத நல்லிணக்கம், மகிழ்ச்சியாக வாழ்வதற்குத் தேவையான குறைந்தபட்ச சூழல் போன்றவற்றை இழந்துள்ளமையாலேயே அவர்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர்.
கடந்த காலத்தில் எமது முன்னோர்கள் நமக்கு வழங்கிய செழுமையான நாடு மற்றும் விழுமியங்கள் நிறைந்த சமுதாயத்தையும் இழந்துக் கொண்டிருப்பதை கண்டு மக்கள் அதிருப்தி அடைந்துள்ளது சாதாரணமானதாகும். எனவே, மக்களின் இறையாண்மையைப் பாதுகாப்பது அவர்களின் உரிமையாகும்.
பொலிஸ், இராணுவம், அவர்களது குடும்பங்கள், குழந்தைகளும் இந்த மக்களின் ஒரு பகுதியாகும். மேலே கூறப்பட்ட இறையாண்மையுள்ள மக்களின் ஒரு பகுதியாகும்.
இந்த தருணத்தில் ஒரு சில பேராசை பிடித்த ஆட்சியாளர்களுக்காக ஆயுதம் ஏந்தி பொதுமக்களின் போராட்டங்களை நசுக்குவது மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.
எனவே, ஜனநாயகம் மற்றும் சட்டத்தை பாதுகாக்கச் செயல்படுவது சட்டத்தரணிகள் மற்றும் நீதித்துறையின் தவிர்க்க முடியாத பொறுப்பாகும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டும்.
நீதித்துறையானது மக்களின் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி, நீதி மற்றும் சமத்துவத்தின் காவல் தெய்வமாகக் கருதப்படுகின்றதுடன், சட்டத்தரணிகளும் காவல் தெய்வங்களாகக் கருதப்படுகின்றனர்.
போராட்டக்காரர்களை குற்றவாளிகளாகக் கருதும் பேராசை பிடித்த ஆட்சியாளர்களின் சார்பாக குற்றவியல் சட்டத்தின் கீழ் கைது செய்து வழக்குத் தொடரப்படுவதற்கு எதிராக சட்டத்தரணிகள் இலவசமாகப் முன்னிலையாக வேண்டும். இல்லையேல் சட்டத்தை மதிக்கும், ஒழுக்கமுள்ள சமுதாயம் ஒன்று இருக்காது.
இலங்கை அரசியலமைப்பின் மூன்றாம் பிரிவு உறுப்புரைகளுக்கு அமைய, சுதந்திரமான நீதிமன்றங்களின் ஊடாக மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், சமூக நீதியை நிலைநாட்டவும் தங்களுடைய அறிவு, ஞானம் மற்றும் பேனா முனை ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாகும்.
அண்மைக் காலமாக கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளான அதேவேளை உலக நாடுகள் மத்தியில் தோற்கடிக்க முடியாத வரலாற்றைக் கொண்ட இலங்கை நீதிமன்றங்களால் சமூக நீதியும் நியாயமும் நிறைவேற்றப்படும் என்பதில் உறுதியாக உள்ளோம்.
நீதியும் நியாயமும் நிறைந்த ஒரு வளமான நாட்டை உருவாக்க இலங்கை மக்களுக்கு எப்போதும் வலிமையும் தைரியமும் இருக்கட்டும்!
அனைவருக்கும் இறைவனின் பாதுகாப்பும் ஆசீர்வாதமும் கிடைக்கட்டும்!
தீய மனிதர்களின் அறியாமை நீங்கி நலம் உண்டாகட்டும்!
B.A(Hons)Peradeniya,
LLM(Deakin).
C.HR(Strasbourg)
M.A.(IR)Colombo.
பாராளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட அரசியலமைப்பு பொதுமக்களின் கருத்துக்கள் குழுவின் உறுப்பினர் – 2016