சட்ட ஒத்துழைப்பு
14 ஆண்டுகளாக, மனித மற்றும் இயற்கை வளங்கள் மேம்பாட்டு அறக்கட்டளை (HNRDF) ஒரு உறுதியான கனவைக் கொண்டுள்ளது. இலங்கையில் மனித உரிமைகள் கடுமையாகப் பாதுகாக்கப்படும், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய சமூகங்களிலுள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.
இந்தச் சமூகங்களுடன் நெருக்கமாகப் பணிபுரிவதால், அவர்கள் எதிர்கொள்ளும் பாரிய சவால்களுக்கு சட்ட உதவியை அணுகுவதில் நெருக்கடிகள் எதிர்க்கொள்வதை நாங்கள் நேரடியாகப் பார்த்துள்ளோம்.
தென் மாகாணத்தில் மட்டுமன்றி நாடு முழுவதிலும் இந்தப் பிரச்சினை ஆழமாக வேரூன்றியுள்ளது. அந்த சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்குவதற்கான எங்களின் அர்ப்பணிப்பை மேலும் தூண்டியுள்ளது.
Women Fund Asia இன் ஆதரவுடன், HNRDF சட்ட ரீதியான அணுகல் இடைவெளியைக் குறைக்கும் பணியைத் ஆரம்பித்துள்ளது. எங்களுடைய இலவச சட்ட உதவி முகாம்கள் மற்றும் இலங்கையின் தென் மாகாணத்தின் பின்தங்கிய கிராமங்களை சென்றடைவது இந்த பணிக்கான அடையாளமாகவுள்ளது.
2023 டிசம்பர் 28 ஆம் திகதி மாத்தறை தெவிநுவர கபுகம கிராமத்திற்கு இதுபோன்ற முகாம் ஊடாக நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டது. முகாமின் போது, ஏராளமான சிவில் சட்ட சிக்கல்களுக்கான ஆலோசனை மற்றும் ஆதரவை வழங்குவதன் மூலம் அவர்களிள் தேவையின் வெளிப்பாட்டையும் அடையாளம் கண்டுக்கொண்டோம்.
சில பிரச்சினைகளுக்கு வழிகாட்டுதல் மூலம் தீர்வு காணப்பட்டாலும், சில பிரச்சினைகள் உணர்வுபூர்வமானவை என்பதால் தொடர்ந்து சட்ட பாதுகாப்புகள் தேவைப்படுவதாக உள்ளது. நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதில் ர்Nசுனுகு உறுதியாக உள்ளது.
எங்கள் இதயங்களில் இந்த பணி மீது ஆழமான நம்பிக்கை உள்ளது.
இன்று ஒரு பெண் தனக்கான அதிகாரத்தை பெற்றால், நாளை நீதியை வெற்றிக்கொள்ளும் வெற்றியாளராகிறாள். கல்வி மற்றும் சட்ட ஒத்துழைப்புக்கான அணுகல் ஆகியவை இந்த மாற்றத்திற்கான அடையாளங்களாகும். சட்ட கட்டமைப்பிற்குள் செல்ல பெண்களுக்கு தேவையான அறிவு மற்றும் கருவிகளை வழங்குவதன் மூலம், அவர்களுக்கு மட்டுமல்லாது அவர்களின் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பிரகாசமான எதிர்காலத்திற்கு நாங்கள் வழி வகுக்கின்றோம்.
HNRDF ஊழியர்களின் அர்ப்பணிப்பே இந்த முகாம்களின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. சுரசா அபிவிருத்தி அறக்கட்டளையின் தாராளமான ஒத்துழைப்பு மற்றும் உயர் நீதிமன்ற சட்டத்தரணி சுனில் ஜயரத்ன, சட்டத்தரணி துஷாரு கந்தில்பன, சட்டத்தரணி தனுக்ஷ குரே மற்றும் சட்டத்தரணி சிஷானி தேனுவர போன்ற வளவாளர்களின் நிபுணத்துவத்தினால் இந்த முகாம் சாத்தியமானது.
HNRDF இன் பயணம் கூட்டு நடவடிக்கையின் மாற்றத்துக்கு ஒரு சான்றாகும். ஒவ்வொரு பெண்ணும் அதிகாரம் பெற்ற நிலையில், ஒவ்வொரு பெண்ணுக்கும் அதிகாரம் வழங்கப்படுவதன் மூலம் மனித உரிமைகள் உண்மையாக இருக்கும் இலங்கையை நெருக்குகின்;றோம் என்பதோடு, மனித உரிமைகள் ஒரு நேசத்துக்குரிய கனவு மட்டுமல்ல என்பதையும் உணர்கின்றோம்.